8.09.2020

 

எழுத்தாளர் கு அழகிரிசாமி !


      ருபதாம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தவர் கு. அழகிரிசாமி அவர்கள் .சிறுகதை, கட்டுரை , புதினங்கள் , நாடங்கங்கள் , கவிதைகள் , கீர்த்தனைகள் , மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார் .

      இவர் திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைச்செவல் என்ற சிற்றூரில் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 23 ம் நாள் குருசாமி -- தாயம்மாள் தம்பதிகளுக்கு முதல் மகனாகப் பிறந்தார் .வசதியின்மையின் காரணமாக நான்காவது வரைகூட படிக்க வைக்க அவரது பெற்றோரால் முடியவில்லை . ஆனால் விடாமுயற்சியுடன் எஸ் எஸ் எல் சி வரை படித்து முடித்தார் . அந்த சிற்றோரில் அந்த காலத்தில் எஸ் எஸ் எல் சி வரை படித்த ஒரே மனிதர் என்ற பெருமை அவருக்கு இருந்தது .பள்ளிப்படிப்பைவிட அனுபவத்தில் அவர் பெற்ற அறிவே அதிகம் .இவர் எழுத்தாளர் கி .ராஜநாராயணனின் இளமைக்கால நண்பர் ஆவர் .

     ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் எழுத்து அவரை மிகவும் கவர்ந்தது . தமிழ் இலக்கியங்களுடன் மேல்நாட்டு இலக்கியங்களையும் படித்தார் .பழைய பாடல்களுக்கு உரை எழுதும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டார் . அரசுப்பணியில் சேர தேர்வு பெற்றதால் சார்பதிவாளர் அலுவலத்தில் முப்பத்தைந்து ரூபாய்க்கு எழுத்தர் பணி கிடைத்தது . ஆனால் நாள் தோறும் பத்திரங்களைப் பதிவிட அவருக்குப் பிடிக்கவில்லை . அந்த எழுத்தர் பணி மனநிறைவு தரவில்லை அவருக்கு , இடைப்பட்ட காலத்தில் அவர் எழுத்திய முதல் சிறுகதை தொகுப்பான " உறக்கம் கொள்ளுமா ? " 1943 ஆம் ஆண்டு " ஆனந்த போதினி " மாத இதழில் வெளிவந்தது .

      தன்னுடைய முதல் சிறுகதை தொகுப்பை வெளியிட்ட ஆனந்த போதினி சென்னைக்கு வந்து சேர்ந்தார் . அந்த பத்திரிகையின் ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் , அழகிரிசாமியின் எழுத்தாற்றலைப் புரிந்துகொண்டு அவருக்கு உதவி ஆசிரியர் பணியைத் தந்தார் . பிரசண்ட விகடனில் வெளிவந்த அவரது கதைகளை சமகால எழுத்தாளர்களான வல்லிக்கண்ணனும் , புதுமைப்பித்தனும் , தொ.மு.சி.ரகுநாதனும் பாராட்டினார்கள் . பின்னர் தமிழ்மணி என்ற அரசியல் வார இதழில் சேர்ந்து சில காலம் பணியாற்றினார் . அதன் பிறகு வை. கோவிந்தன் வெளியிட்ட சக்தி மாத இதழில் உதவி ஆசிரியராக சேந்தார் . அதன் ஆசிரியராக இருந்தவர் தி. ஜ .ரங்கநாதன் . இவரின் முற்போக்கு சிந்தனையையும் ஆற்றலையும் கண்டுகொண்ட வை. கோவிந்தன் சக்தி இதழின் பதிப்பகத்தில் இடமளித்து எழுதுவதற்கு வாய்ப்பளித்தார் .

     இவரின் முயற்சியால் வெளியான கம்பராமாயணம் , காவடிச்சிந்து ஆகிய பாதிப்புகள் அவருடைய ஆராச்சித்திரனையும் மொழியாக்கத்தையும் வெளி உலகுக்கு தெரியப்படுத்தின . " ராஜ வந்திருக்கிறார் " என்று அவரது கதை இந்திய மொழிகளிலும் , ரஷ்ய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த கதை

இவரது " அன்பளிப்பு " என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது .


இவர் எழுதிய நூல்கள்

புதினங்கள்

டாக்டர் அனுராதா

தீராத விளையாட்டு

புது வீடு புது உலகம்

வாழ்க்கைப் பாதை

சிறுவர் இலக்கியம்

மூன்று பிள்ளைகள்

காளிவரம்

மொழிபெயர்ப்புகள்

மாக்சிம் கார்க்கியின் நூல்கள்

லெனினுடனும் சில நாட்கள்

அமெரிக்காவில் யுத்தம் வேண்டும்

விரோதி பணியாவிட்டால்

நாடகங்கள்

வஞ்ச மகள்

கவிச்சக்கரவர்த்தி

சிறுகதைத் தொகுப்புகள்

அன்பளிப்பு

சிரிக்கவில்லை

தவப்பயன்

வரப்பிரசாதம்

கவியும் காதலும்

செவிசாய்க்க ஒருவன்

புதிய ரோஜா

துறவு

கட்டுரைத் தொகுப்பு

இலக்கியத்தேன்

தமிழ் தந்த கவியின்பம்

தமிழ் தந்த கவிச்செல்வம்

நான் கண்ட எழுத்தாளர்கள்

திரு கு. அழகிரிசாமி சூலை திங்கள் 5 ஆம் தேதி 1970 ஆம் ஆண்டு இந்த உலக வாழ்வை நீத்தார் .

கருத்துகள் இல்லை: