10.28.2020

 தொல்காப்பியம் --அறிமுகம் 


             தமிழின் ஆதி அடையாளமாக நமக்கு கிடைத்திருப்பது தொல்காப்பியம் மட்டுமே . தொல்காப்பியத்திற்கு முந்தைய நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை அல்லது சிலரால் திட்டமிட்டு கிடைக்காமல் செய்யப்பட்டுவிட்டது . தொல்காப்பியம் உயர் தனி செம்மொழியாம் தமிழின் மிகப்பழமையான இலக்கணநூல் ஆகும் . இந்த நூல் மதுரை திட்டம் (Project Madurai ) என்ற இணைய தளத்தில் இலவசமாக கிடைக்கிறது .


தொல்காப்பியம் உரையாசிரியர்கள் 


           தமிழ்மொழியில் கற்போருக்கு கிடைத்திட்ட முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் என்றாலும் இதற்கு முன்னால் அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற நூல் இருந்தது என்பதற்கான சான்றுகள் இலக்கிய நூலகளில் காணப்படுகிறது . ஆனால் அகத்தியம் எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற ஐய்யப்பாடு சில அறிஞர்களிடம் நிலவுகிறது . 


         ஒரு மொழி பிறக்கும்போது பேச்சு மொழியாக இருந்தது பின்புதான் எழுத்து வடிவம் பெற்று எழுத்து மொழியாக முடியும் . என் கணிப்பில்  பேச்சு மொழியாக இருந்து எழுத்து மொழி ஆவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கும் அக்கால சூழ்நிலையில் . இன்றைய நாகரீகம் மிகவும் வளர்ந்த நிலையில் புதிதாக ஒரு மொழி பேச்சு வழக்கில் தொடங்கினால் எழுத்து மொழியாக குறைந்தது நூறு அங்குகளாகலாம் .


    உலகில் சில மொழிகள் பேச்சு மொழியாகவே இருந்து அழிந்துபோன வரலாறுகள் உண்டு . வேறு சில மொழிகள் பேச்சு எழுத்து எனக் கொண்டிருந்தாலும் சிறந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் இல்லாமல் இருப்பது கண்கூடு .எழுத்து மொழியான பின் இலக்கியங்கள் அடிப்படையில் இலக்கணம் உருவானது . தமிழ் மொழியில் கிடைத்த தொல்காப்பியம் நம் மொழியின் தொன்மை , பழமை , வளமை , பெருமையை நமக்கு புலப்படுத்துகின்றது .


வளரும் ...


 

  நம் தாய் தமிழின் பெருமையும் வளமும் ...


     ஆல், அரசு , வேம்பு , அத்தி ,மா , பலா ,வாழை , பூவரசு போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டுந்தான் 'இலை " என்று பெயர் .


   அகத்தி , பசலி , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலை " கீரை "ஆகின்றது .


   மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் " பூண்டு" என்று பெயர் .


  அறுகு, கோரை ,தர்ப்பை முதலியவைகளின் இலைகள் " புல்" என்று அழைக்கப்படுகின்றது .


  மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்கு பெயர் " தழை' ஆகும் .


  நெல் , வரகு முதலியவற்றின் இலைகள் "தாள் " ஆகும் .


  சப்பாத்தி , கள்ளி , தாழை இனங்களின் இலைகளுக்கு "மடல்' என்று பெயர் .

     

    கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகள் ' தோகை" என்று அழைக்கப்படுகின்றது .


  தென்னை , கமுகு , பனை முதலியவற்றின் இலைகள் " ஓலை " என்று சொல்லப்படுகின்றன .


    இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள் இலக்கணம் மட்டுமல்ல , தாவரவியல் , அறிவியலும் அடங்கி இருக்கிறது நம் தமிழில்  பொருள் வளம் மட்டுமல்ல , பேரழகும் கூட கொட்டிக் கிடக்கின்றது  . சுவைக்கத்தான் ஆளில்லை .