6.30.2020

ஆறு மனமே ஆறு



கண்ணதாசன் பாடலொன்று "ஆறு மனமே ஆறு "என்று துவங்கும் . ஆண்டவன் கட்டளை படத்த்தில் இடம் பெற்றது . இந்த பாடலில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா ? இருக்கிறது , கண்டிப்பாக இருக்கிறது . இந்த பாடலில் எட்டி திருக்குறளை ஒரே பாடலில் கண்ணதாசன் எழுதி உள்ளார் .

பாடலையும் , தொடர்புடைய திருகுறையும் கீழே பார்ப்போம் .

பாடல் :

ஆறு மனமே ஆறு அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும்
வகைக்கு தெய்வத்தின்
கட்டளை ஆறு

ஒன்றே சொல்வார் ஒன்றே
செய்வார் உள்ளத்தில்
உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம்
துன்பத்தில் இன்பம்
இறைவன் அமைத்த நியதி

சொல்லுக்கு செய்கை
பொன்னாகும் வரும்
இன்பத்தில் துன்பம் பட்டாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

உண்மையை சொல்லி
நன்மையை செய்தால் உலகம்
உன்னிடம் மயங்கும்
நிலை உயரும் பொது பணிவு
கொண்டால் உயிர்கள்
உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும்
பெரும் பணிவு என்பது பண்பாகும்
இந்த இரண்டு கட்டளை
அறிந்த மனதில் எல்லா
நன்மையையும் உண்டாகும்

ஆசை, கோபம் களவு
கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன்
மனித உருவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள
மனம் உயர் தெய்வம் என்பது
பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த
மனது ஆண்டவன் வாழும்
வெள்ளை மனம்

மேற்கோள் காட்டப்பட்டுள்ள திருகுறள்கள்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்


ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்


இன்பத்தில் துன்பம் , துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால்
தான்கண் டனைத்து இவ்வுலகு


உணமையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிரிகள் உன்னை வணங்கும்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மானப் பெரிது


நிலைத்த திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்காறு இயன்றது அறம்


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை
உண்மையா னுண்டிவ் வுலகு

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் .

கண்ணதாசன் -- தனது பாடல்களில் திருக்குறளையும் எளிய முறையில் பயன்படுத்தி இருக்கிறார் என்பது தெளிவு . இறைவன் தமிழ் மொழிக்கு அளித்த ஈடிணையில்லாக் கவிஞன் .

6.28.2020

எழுத்தாளர் சா கந்தசாமி

சா .கந்தசாமி அவர்கள்

1940 ஆம் ஆண்டு பழைய தஞ்சை மாவட்டத்தில் மயிலாடுதுறையில் பிறந்தார் . அங்கேயே பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியை முடித்தார் .. சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் , நாவலாசிரியர் ஆவார் .

இவர் 1968 இல் எழுதிய " சாயாவனம் " புதினம் பிரசுரமானத்திலிருந்து எழுத்துலகில் பிரபலமானார் . இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது . நேரு , பெரியார் , .உ. வே. சா , மற்றும் வே . சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை தன்னுடைய இளகிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார் .

" இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை , நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றை கொடுத்துள்ளது . இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது " என்று அவர் கூறுகிறார் . எழுத்துக் கலை , கலை அலங்காரமாக இருக்காது என நம்புகிறேன் . சிறந்த இலக்கியம் , நேரம் , கலாச்சாரம் , மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும் . இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல . மிக முக்கியமாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும் .

தமிழக அரசின் லலித்கலா அகாடமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பனியைப் பாராட்டும் வகையில் 1995 இல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி வழங்கி ஊக்குவித்ததது . இவரது தென்னிந்திய சுட்ட மண் (Terracotta ) பற்றிய ஆய்வின் அடிப்படையாக கொண்டு சென்னை தூர்தர்ஷன் " kaval தெய்வங்கள் " என்னும் 20 நிமிட ஆய்வுப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது .தென்னிந்திய டெராகாட்ட பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படியில் Chennai பொதிகை 1989 ஆம் ஆண்டு சைப்ரஸில் " நிக்கோஸியா வில் அரங்கேறின திரைப்படவிழாக்காவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப் படமான காவல் தெய்வங்கள் வெளியிட்டது .மார்ச் 1995 இல் லலித் கலா அகாடமி இவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது .

1998 இல் இவரது " விசாரணைக்கு கமிஷன் " என்ற நாவலுக்கு தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கி பெருமைப்படுத்தியது .இவர் எழுதிய " நிகழ் காலத்திற்கு முன்பு " எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துரையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது .

இவருடைய சிறுகதையான " தக்கையின் மீது நான்கு கண்கள் " இயக்குனர் Vasanth அவர்கள் குறும்படமாக எடுத்துள்ளார் .

இவரது சிறுகதைகளான

1 . தக்கையின் மீது நான்கு கண்கள்

2 .ஹிரண்யவதம்

3 . சாந்தகுமாரி

இந்த மூன்று கதைகளும் ஜெயமோகனின் இந்த நூற்றாண்டின் சிறந்த நூறு சிறுகதைகளில் குறிப்பிட்டுள்ளார் .

இந்த கடைகள் எஸ் ரா வின் சிறந்த நூறு கதைகள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு .

இவரது சாயாவனம் நாவல் தமிழில் இந்த நூற்றாண்டில் வெளிவந்த சிறந்து நாவல்களில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் அதில் மிகையில்லை .

கண்ணீர்… !

விசை மாற்றத்தினால்
திசை மாற்றம் பெறும்
பசையில்லா திரவம்

துளித்துளியாய் சுரந்து
படிப்படியாய் திரண்டு
வெளியேறும் திரவச்சொல்

இதயம் புகுந்து
கொல்லாமல் கொல்லும்
அருவ வில்

உப்புச் சுவை
உதிரும் மழை
அதிரும் மனம்
கரையும் கல்
உரையில்லாச் சொல்

வல்லினத்தை வீழ்த்தும்
மெல்லினத்தின் ஆயுதம்
இயற்கை தந்தது
என்றும் வலிமையானது

போர் முனையில்
வென்ற வனெல்லாம்
பாவையின் பார்வையின்
நீர் முனையில்
தோற்பான் காண் !

6.21.2020

தந்தையர் தின வாழ்த்துக்கள் !

அப்பா !

பாசம் மறைக்கும்
பாரம் சுமக்கும்
ஆசை துறக்கும்
 உழைக்கும் கரங்கள் !

 சிந்திக்க தெரிந்தவர்
 சிரிக்க மறந்தவர்
வந்தணை செய்யாவிட்டாலும்
 நிந்தனை செய்யாதீர் ..

உழைக்க தெரிந்த
ஓய்வெடுக்க மறந்த
அம்மா அறிந்த
கனிந்த இதயம் !

 பிழைக்க தெரியாத
பேசும் இயந்திரம்
 அதிசய பிறவி
 மணமான துறவி !

கடின முகம்
 கருணை அகம்
 தன்னல சுகம்
 நீயறியாதது நிஜம் ..

 தன்னலத்தை துறக்கனும்
மகவை நினைக்கனும்
 மனதை அடக்கனும்
அதுதான் தந்தையின் இலக்கணம் ..