1.24.2021

 

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்...


        ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? கிடைத்தற்கரிய பழைய நூல்களை தேடி அலையும் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்குமிந்த தமிழ் நூல் காப்பகம் ஆசியாவின் மிகப்பெரிய நூலகம் இது .

         தன வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளனர் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள் .

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களை சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களை சேர்த்துள்ளார் . இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரிசிஸ் அகராதி தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல்தொகை நூல்களின் முதல் பாதிப்புகள் , தொல்காப்பியம் முதல் பாதிப்பு , கம்பராமாயணம் முதல் பதிப்பு என் ப்பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு .திருக்குறளின் அத்தனை பதிப்புகளும் இங்குள்ளன .

         மறைமலையடிகள் , மு.வ , தெ.பொ, மீ , வையாபுரி ,பாவாணர் ,, ந, சி ,கந்தையா முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான .500 க்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் ,உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் , இசை குறுந்தகடுகள் என பல அரிய திரட்டுகளை கொண்டுள்ளது இந்த நூலகம் . தரைத்தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் , ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலைநயம் மிக்க கட்டடமாக திகழ்கிறது இது .

         பல்லடம் மாணிக்கம் அவர்கள் நிறங்கள் என்ற காலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளிட்டுளார் .வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார் . 24 இதழ்களோடு நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தக்கதாகும் ..

நன்றி !

 

பேறுகால காத்திருப்பு...


அனல் பறக்கும்
அதி வெயிலில்
மணல் துகள்களின்
தவக் கோலம் ..
பாலைவனத்தில்
கால் பாதிக்குமா
பருவமழை தூறல்கள் ?
பேறுகால காத்திருப்பு ...

 

மடையா என்ற சொல்லின் மூலமும் அந்த உண்மையான பொருளும்...



      " மடையா" என்ற சொல் நாம் அன்றடம் பயன் படுத்தும் ஒன்று . அந்த சொல்லின் உண்மையான பொருள் பலருக்கு தெரியாது . நாம் அந்த சொல்லையே இன்று வரை தவறான பொருளிலேயே பயன்படுத்தி வருகிறோம் . அந்த சொலின் உணமையான பொருள் என்ன ? அந்த சொல் எப்படி பிறந்தது ?

        ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற தமிழன் கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் "மடை" . மடை களை அமைக்க முதலில் பனைமரங்கள் பயன்படுத்தப்பட்டன . உறுதியான பனைமரங்களை தெரிந்தெடுத்து அதன் உள்தண்டை நீக்கம் செய்து அதனை ஏரியின் அடியாழத்தில் பத்தித்து அதன் உள் ஓட்டையில் கோரை , நாணல் , களிமண் கலந்து அடைத்து விடுவார்கள் .வெள்ளக் காலங்களில் மடைகளைத் திறப்பதற்கு என்று ஆட்கள் இருப்பார்கள் , உயிரைப் பணயம் வைத்து நீருக்குள் மூழ்கி செய்யும் சாகசப் பணியாகும் . அந்த நபர் மூச்சடக்கி நீரில் மூழ்கி அடியாழத்தில் இருக்கும் மடையின் அடைப்பைத் திறந்து விடுவார் .மடை திறந்ததும் புயல் வேகத்தில் வெளியேறும் வெள்ளம் மடை திறந்தவரையும் இழுத்துச் செல்லும் . மடை திறக்கச்சென்று மாண்டவர்கள் அதிகம் , மீண்டவர்கள் குறைவு . இவர்கள் தான் "மடையர்கள் "என அழைக்கப்பட்டனர் .

       பிற்காலத்தில் காலப்போக்கில் அறிவற்ற செயல்களை செய்பவர்களை "மடையர்கள்" என்று அழைக்க தொடங்கிவிட்டனர் . மடைமை வேறு , மடையர்கள் வேறு .தமிழ் பெயர்கள் அனைத்தும் ஆழமான வேர் கொண்ட பொருள் பொதிந்த இறவா சொற்கள் . நாம் தான் அவற்றை அவற்றின் பெருமைகளை , இனிமையை , ஆழத்தை அறிய மறந்த , தெரியாத அறிவிலிகளாய் தவறான பொருளில் பயன்படுத்திக்கொண்டுள்ளோம் .

நன்றி !