10.30.2020

 தமிழ் மொழியின் சொல்வளம் அறிவோம் ...


     சொல்லாழமும் பொருளாழமும் மிக்க வழமையான ஒரு மொழி தமிழ் . 

அம்மாவை குறிக்கும் வேறு சொற்களை கீழே காண்போம் .


அம்மா  , அம்மனை , அம்மு , அம்மே , அம்மை , அன்னை ,ஆச்சாள் , ஆச்சி ,ஆத்தா , ஆத்தாள் , ஆய் , ஆயம் , ஆயி , இறைவி , ஈன்றவள் , கோ , சடமி , தம்மனை , தம்மை , தம்மோய் , தல்லி ,தவ்வை , தன்னை , தாத்திரு ,தாய் , தாயார் , பயந்தாள் ,பெற்றவள் , மாதிரு , மாதா ,மாதிருகை , முதன்மை , மொய்தாய் , மோய் , மௌவை , வீரை , இன்னும் பிற .


அம்மா என்ற சொல் சுமார் 200  மொழிகளில் அம்மா என்றோ , மா என்ற வருகிறது என்பது வியப்பான செய்தியல்லவா .


  அப்பாவை குறிக்கும் வேறு சொற்கள் :


 அச்சன் , அண்ணல் , அண்ணா,அத்தன் , அத்தா , அப்பா , அப்பன் ,அப்பு , அம்மான் , அய்யா , அவிச்சன் ,ஆ , ஆச்சான் , ஆஞ்ஞ்சான் , ஆஞ் ன் , இரவின் , ஈரி , ஈன்றவன் , எம்மான் , ஐ , ஐயன் , ஐயா , குரவன், கோ ,சன்னியன் , ஞாதி ,தகப்பன் , தந்தே , தாதிரு , பெற்றவன் , போத்து , போய், முதல்வன் , வாப்பா .