7.24.2020

வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?


வள்ளுவன் சொன்ன கவரிமா , கவரிமான் ஆனது எப்படி ?

கவரிமான் என்பது மான் இனமே அல்ல . அதன் உண்மையான பெயர் கவரிமா என்பதே . கவரிமா என்பது தமிழ்நாடு விலங்கே அல்ல .இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது , அதுவும் எருமை மாடு வகையை சார்ந்தது . இதையே நமது மக்கள் காலப்போக்கில் கவரி மான் என்று குழப்பிக் கொள்கிறார்கள் .

கவரி மான் எங்கு வசிக்கிறது ? முடி விழுந்தாள் தற்கொலை செய்துகொள்ளுமா ? எப்படி தற்கொலை செய்து கொள்ளும் ? என்ற கேள்விகளுக்கு யாரிடமாவது பதில் இருக்கிறதா ?

" மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் " குறள் 969 .


கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்துகொள்ளும் அதே போல மானம் மிக்கவர்கள் , தம் பெருமைக்கு இழுக்கு வரும் பொது உயிர் வாழமாட்டார்கள் என்பது பொதுவாக இந்தக் குரலுக்கு கூறப்படும் விளக்கம் . ஆனால் அப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறியியலில் தங்கள் இல்லையே ? இந்த குறளைக் கவனமாக படியுங்கள் மீண்டும் ஒருமுறை . கவரி மா என்றே குறிப்பிடுகிறார் , கவரிமான் என்றல்ல . " கவரிமா என்ற விலங்கைத் தான் நம் மக்கள் காலப்போக்கில் பேச்சுவாக்கில் " கவரிமான் " என்று மாற்றிவிட்டனர் பொருள் புரியாமல் .

புறநானுற்றில் இருந்து ஒரு பாடல் , அதில் இது பற்றிய எ குறிப்பு இருக்கிறது .

" நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வடதிசை யதுவே வான்
தோய் இமயம் "

இமயமலையில் கவரிமா என்ற விலங்கு நரந்தை என்றும் புல்லை உண்டு தன்துணையுடன் மகிழ்ச்சியாக வாழும் என்பது இதன் பொருள் . அதாவது இது தமிழ் நட்டு விலங்கல்ல .இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு . கவரி மா என்பது மான் வகையல்ல , எருமை மாட்டு வகையைச்சார்ந்தது என்பது இரண்டாவது வியப்பு .வள்ளுவர் சொன்னது இதைத்தான் .

இந்த கவரிமா பற்றி பதிற்றுப்பத்து என்ற நூலிலும் குறிப்புகள் உள்ளன . முடி சடை போல தொங்கக்கூடிய விலங்குதான் கவரிமா . இதன் முடியை எடுத்து செயற்கை முடியை உருவாக்குவது வழக்கம் . கவரி என்ற சொல்லில் இருந்தான் சவரி / சவுரி என்ற இன்றைய சொல் உருவானது . மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல் .

இந்த குறளுக்கு என்ன பொருள் ?

பனிப்பகுதியில் வாழும் அவரிமாவுக்கு அதன் முடி கடுகுக்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது . அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ , மனிதர்களால் வெட்டப்பட்டாலோ குளிர் தாங்க முடியாமல் இறந்துவிடும் என்பதே அதன் உண்மையான பொருள் ஆகும் .

குறளின் பொருள் பிற்காலத்தில் திரிக்கப் பட்டுவிடாது என்பது வருத்தமான செய்தி . இனியாவது இந்த குறளை சரியான பொருளறிந்து பயன்படுத்துவோமாக .

நன்றி !

கருத்துகள் இல்லை: