3.30.2018

மது வருந்துது மது அருந்து பொத்துக்கொண்ட கூரை அதிலிருந்து வரக்கற்றுகொண்ட ஊற்று கத்திக்கொண்டே - ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டே வட்ட வட்டமாய் சுற்றிக்கொண்டே ஆடும் கட்டழகிகள் கூட்டம் ! கள் அருந்தி முள்ளிருக்கும் புலாலை உள்ளிழுக்கும் நாக்கு உளறுது இவர்களது வாக்கு கண்களால் பெண்கள் தரும் விருந்து சொக்கி சொக்கி திக்கு முக்காடுது ஆண்கள் கூட்டம் அங்கிருந்து உற்சாக பானமருந்து - அது நல்ல மருந்து என்று சொல்லுது மூத்தகுடிகள் மனம் திறந்து மது அருந்து தவறவிட்டால் மதுவருந்துதே என்றெண்ணி மனம் வருந்து ! காதை கிழிக்கும் ஒலிப்பான்கள் கான மழையில் நனையும் கான குயில்களின் கோணல் பார்வை நாணம் எடுத்த விடுப்பால் நாயகர்களின் தேடல் படலம் நாயகிகளின் நாணல் இடுப்பில் ... நாயகிகளுக்கு தேவை கள் அதிகம் நல்ல ஆத்மாக்களே உதவிக்கு விரையும் ! சிவப்பு விளக்கு எரியுது சிறுது நேரத்தில் அணையுது சிவந்த விழிகளில் சிரிப்பு சிலிர்ப்பு களிப்பு வழியுது பச்சை விளக்கு எரியுது பத்து வினாடியில் மறையுது மூச்சுமுட்ட பாடும் பெட்டைகள் மூச்சிழந்த ஆண்மரக்கட்டைகள் ! மஞ்சள் விளக்கு எரியுது கெஞ்சல் அழகிகள் ஆடும்போது முதுகில் அஞ்சல்பெட்டி தெரியுது அதரங்கள் அதன் வழியே வழியுது ஊதா விளக்கு எரியுது உற்சாக மழை பொழியுது ராதா, நீதா, சீதா ,கீதா எல்லோர் மீதும் போதை சாரல் பொழியுது காதில் கம்மல் கண்ணைப் பறிக்குது காமக் கண்கள் காளைநெஞ்சை பிளக்குது ! வண்டுகளே.... மகரந்தம் அதை சிந்தும்... மலர்கள் மலர்வதைப் பாரும் இது மது மதுவருந்தும் நேரம் ! சமிபத்தில் ஒரு அலுவலக புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரில் பார்த்தபோது என்மனதில் ஓடிய வரிகள் இவை .

கருத்துகள் இல்லை: