9.21.2014

குட்டிக்கனவுகள் பகுதி - 1

குடைக்குள் குழந்தை ! மழைக்கு வருத்தம் : முத்தம் கொடுக்க முடியவில்லையே : முகத்தைப் பார்க்கமுடியவில்லையே என்று . குடைக்கோ மகிழ்ச்சி : மொத்தமும் தன்னோடு என்பதால்.. யுத்தம் தொடர்கிறது ... இன்னும் கனவு காண்போம் .,

அரிது அரிது ...!

அரிது அரிது அரிது ! அரிது! இவை எல்லாம் காண்பது அரிது ! இமைக்காத மனிதன் , இளைக்காத நிலவு களிக்காத உறவு ! சலியாத மனது இனிக்காத மழலை உழைக்காத எறும்பு குறைக்காத நாய் ! அழுவாத மேகம் அது இல்லாத வானம் அக்னி இல்லாத யாகம் ! உதிராத மலர் உறையாத உதிரம் ஓடாத முயல் நீந்தாத கயல் ! வளையாத நாணல் கொட்டும் மழைக்குப்பின் குரலெழுப்பாத நுணல் ! வெள்ளாமை விளையும் கடல் மணல் ! இரவில் வளம் வரும் சிவப்பு சூரியன் ! நிறைவான நினைவுகொண்ட தெளிவான காரிகை ! கரையாத கழியாத சிலையான நாழிகை ! கேலி செய்யாத தோழிகள் ஊழி செய்யாத மானுடம் தாய்மையை விரும்பாத பெண்மை ! ஏழ்மையை விரும்பும் ஆண்மை ! மேடு நோக்கிப் பயணிக்கும் நதி ! குறைகளே இல்லாத மனிதப் பிறவி ! குறை காணாத சுற்றம் ! அரிது ! அரிது ! இவை எல்லாம் காண்பது அரிது !