11.03.2013

தீபாவளி ...!


தீபாவளி ..! 
தீயாய் வளி ! 
தீராத வலி 
நீல நீள மகளுக்கு ! 
கரு மேக பெரு மகளின் 
இரு மாத கற்பம் 
சிறு பொழுதில் கலைந்திட
 வரும் வழியில் 
பல நூறு நீர்த்துளிகள் ! 
கரும்புகைப் புளி 
வானில் கரைத்த 
வானர மழலைகள் ... 

சிறுதிரை முன்னால் 
பெருசுகள் அவை ஈன்ற 
சிறுசுகள் சினிமா தனமாய் ... 
தீபாவளியின் பொருள் புரியாமல் 
பொழுதைக் கொல்ல 
அழுது புலம்பினாள் 
நிலா மகள் உடன் 
நில மகளும் ! 

திருந்து மானிடா ! 
தீபாவளின் பொருள் உணர்ந்து 
சிறார்களுக்கு உணர்த்து ! 
சின்னத் திரையையும் 
வண்ணத் திரையையும் 
மெல்ல ஒதுக்கி 
நல்ல சமுதாயம் வளர 
திண்ணமாய் உரமிடு ! 
அதை தினம் தினம் வளர்த்திடு ! 

10.27.2013

அம்மா ....!


அம்மா ....! 

தொப்புழ்கொடி உறவு !
தூய்மையான அன்பின்
அகராதி விளக்கம் !

உன்னத உறவு !
உண்மையில் உதிரம்
உறையும் வரை
தொடரும் அழகு !

அம்மா ..! 

உன்னைப் பற்றிய
உணர்வு ! உயிர்
இருக்கும் வரை
உறையாது அந்த
நினைவு !

அம்மா ...! 

உன்னைப் பற்றி
சும்மாவேணும் நினைத்தாலும்
வருது புதுப் புதுக் கவிதை ! 

பைலின் புயல் !

பைலின் புயல் !
வயலின் வாசிக்க ,
வயலுக்கெல்லாம் வலியில்  
 விழிகள் வலிக்க ,
நீர் தொண்டைக்குழிகளை நிறைக்க ,
இறைவனை உதவிக்கு விளிக்க,
சூரியனோ காரியமின்றி
ஓர் அகத்தில் ,ஒளிந்திருக்க,
ஒளி இழந்திருக்கு ,
 ஒலி செவியை பிளந்தெடுக்க ,
நம் அரசியல்வாதிகள்
அடிக்கலாம்  இன்னொரு
கொள்ளை என்று மகிழ்ந்திருக்க ,
பாவம் ! திருவாளர் பொது ஜனமோ ,
பிழைப்புக்கு வழியென்ன
என்ற குழப்பத்தில் !
நடந்ததென்ன ! நடப்பதென்ன !!
நடக்க இருப்பதென்ன !!!
ஒன்றும் புரியாமல் உழன்றுகொண்டு .

ஏழைகள் ஏழைகளாக இருப்பதன்
ரகசியமே இதுதானே...
இந்தியா என்றாலே ,
அதுதானே... என்ற
குமட்டும் நினைவுடன்
வளியின் தலைவன்
விழியில் ஈரத்துடன்
தன வினையை எண்ணி
வருத்தக் குடைப் பிடித்து
நமது துன்பங்களை எடைபிடித்து
மனம் துடிக்க நெஞ்சம் புடைக்க ,
நஞ்சு குடித்தவன் போல்
இங்கும் அங்கும் நடந்து
பிதற்றிக் கொண்டிருந்தான் .!

2.02.2013

அழுகை ..!


அழுகை ...! 
விசை மாற்றத்தின் 
மொழி மாற்றம் ! 

கண்ணின் நீர் ! 
பெண்ணின் ஆயுதம் ! 
பேயும் தோற்கும் ! 

தன்னம்பிக்கையின் இறப்பு , 
அல்லது தற்காலிக இழப்பு ! 
தண்ணீர் துளிகளின் படையெடுப்பு 
கண்ணீர் என 
பெயரிட்டு அழைப்பு ! 

உப்பு தண்ணீர் , 
உதட்டை தொடும் 
முன்னர் உறைந்துவிடும் 
கொல் நீர் ! 

உப்பு தண்ணீர் , 
தப்பு உரைக்கும் பொழுதும் வரும் ! 
பிறர் எடுத்து உரைக்கும் 
பொழுதும் வரும் 
நல உளம் இருந்தால் ! 

அழுகை ! 
கையை அழுக்காக்கும் ! 
மனதை இளகாக்கும் ! 
அழுவோரின் நோக்கத்தை 
இலகுவாக்கும் ! 
அனுதாபப் பட்டோரின் 
மனதை இலக்காக்கி 
வெற்றியை தனதாக்கும் ! 

அழுகை ..! 
மெய்யை பொய்யாக்கும் ! 
பொய்யை மெய்யாக்கும் ! 
அறிவை மழுக்கும் 
தெறிவையின் தேர்ந்த உத்தி ! 

பெண்ணின் அழுகை ! 
பேராபத்தின் வருகை ! 
கூர் ஆயுதத்தாலும் 
யாராலும் தடுக்க முடியாதது !